தமிழக செய்திகள்

காமராஜர் சிலைக்கு இந்து நாடார் உறவின் முறை சங்கம் மரியாதை

சிவகிரி அருகே ராயகிரியில் காமராஜர் சிலைக்கு இந்து நாடார் உறவின் முறை சங்கம் மரியாதை செலுத்தினர்.

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரியில் இந்து நாடார் உறவின் முறைக்குப் பாத்தியப்பட்ட தெற்கு மாரியம்மன் கோவிலில் காமராஜர் உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு ரத ஊர்வலம் நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்து நாடார் உறவின்முறை தலைவர் அம்மையப்ப நாடார் தலைமை தாங்கினார். சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கணேசன், சி.பா. ஆதித்தனார் ஆரம்பப்பள்ளி செயலாளர் கார்த்திக், கர்மவீரர் காமராஜர் வழிபாட்டுக் குழுத் தலைவர் செண்பகராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராயகிரி- கரிவலம்வந்தநல்லூர் நெடுஞ்சாலைஅருகே அமைந்துள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது சி.பா.ஆதித்தனார் ஆரம்பப் பள்ளியில் பயின்று அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் காமராஜர் வழிபாட்டுக்குழு துணைத் தலைவர் பழனிக்குமார், செயலாளர் தலைமலை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு