தமிழக செய்திகள்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் விழா

வடமதுரையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் விழா நடந்தது.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்ட இந்து மக்கள் கட்சி சார்பில் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் 58-வது பிறந்தநாள் விழா வடமதுரையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு இந்து மக்கள் கட்சியின் வடமதுரை ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் நாகராஜ், செயலாளர் மருதமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட பொதுச்செயலாளர் மாசானம், மாநில இளைஞரணி துணைத்தலைவர் மோகன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இனிப்புகள் வழங்கினர். இதில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் வடிவேல், ஒன்றிய செய்தி தொடர்பாளர் கன்னியப்பன், ஒன்றிய அமைப்பாளர் மணிகண்டன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவில் பகுதியில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து