தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

தினத்தந்தி

தர்மபுரி,

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் நேற்று காலை நிலவரப்படி 14 ஆயிரம் கன அடியாக இருந்து நீர்வரத்து, இன்று காலை 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவிரி கரையோர பகுதிகளில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது