தமிழக செய்திகள்

ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக உயர்வு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

தினத்தந்தி

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை அடுத்த பிலிகுண்டுலு பகுதியில், தமிழககத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 6,500 கன அடியாக உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கபினி, கிருஷ்ணசாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கடந்த 20 நாட்களாக நீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களாக 3 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வந்துகொண்டிருந்தது. இந்நிலையில் தமிழக எல்லை மற்றும் ஒகேனக்கல், அஞ்செட்டி உள்ளிட்ட காவிரி கரையோரம் உள்ள பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் ஒகேனக்கல் நீர்வரத்து 6,500 கன அடியாக அதிகரித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை