தமிழக செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

தினத்தந்தி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. கரையோர பகுதியில் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

கனமழை

கர்நாடக மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன. அணைகளின் பாதுகாப்பு கருதி 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 22 ஆயிரத்து 969 கனஅடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.40 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

தீவிர ரோந்து

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

மேலும் போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு