தமிழக செய்திகள்

புனித காணிக்கை மாதா ஆலய தேர்பவனி

புனித காணிக்கை மாதா ஆலய தேர்பவனி நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட காணிக்கைபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற புனித காணிக்கை மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 25-ம் ஆண்டு பெருந்திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதையாட்டி கோக்குடி பங்குதந்தை ஸ்டீபன் சிறப்பு திருப்பலியை நடத்தி புனித காணிக்கை அன்னையின் ஆடம்பர தேர் பவனியை தொடங்கி வைத்தார். அப்போது பல்வேறு இசை நிகழ்ச்சிகளும், வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. இதையடுத்து ஆலய பங்கு தந்தைகளால் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு ஆடம்பர தேர் பவனியுடன் விழா நிறைவடைந்தது. விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...