தமிழக செய்திகள்

குளித்தலையில் குதிரை-மாட்டுவண்டி பந்தயம்

குளித்தலையில் குதிரை-மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

தினத்தந்தி

நச்சலூர்,

குளித்தலை நகர தி.மு.க. இளைஞரணி சார்பில் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளையொட்டி குளித்தலை சுங்ககேட் பகுதியில் ரேக்ளா பந்தயம் நடந்தது. இதனை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முதலில் மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இதில், பெரியமாடு, சிறிய மாடு, இரட்டை மாடு என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. பின்னர் மாடுகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது.

பின்னர் குதிரை வண்டி பந்தயம் பெரிய குதிரை, சிறிய குதிரை என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. இதையடுத்து குதிரைகள் எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. இதையடுத்து பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், குதிரைகளின் உரிமையாளர்களும் பரிசுகள் வழங்கப்பட்டன. குதிரை, மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு