தமிழக செய்திகள்

கள்ள ஓட்டு போடுவதில் தி.மு.க.வினர் வல்லமை பெற்றவர்கள்..!! எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதில் வல்லமை பெற்றவர்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

சேலம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, மதுரை, நெல்லை, சேலம் உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துற்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது கூறியதாவது:-

அ.தி.மு.க. தமிழகத்தில் ஆக்கப்பூர்வ எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது; எதிர்க்கட்சி மீது பொய் வழக்குப் போடுவதை தி.மு.க. வழக்கமாக கொண்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஜனநாயக ரீதியாக செயல்பட்டதற்கு கைது செய்யப்பட்டுள்ளார். கள்ள ஓட்டு போட முயன்றவரை பிடித்து கொடுப்பது குற்றமா?

தி.மு.க. கள்ள ஓட்டுப் போடுவதில் வல்லமை பெற்றவர்கள். வாக்கு எந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தி.மு.க.விற்குதான் வாக்கு செல்வது போன்று தில்லுமுல்லு செய்து தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து