தமிழக செய்திகள்

டிடிஎப் வாசனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை

சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் பரிசோதனைக்காக டிடிஎப் வாசன் அழைத்து வரப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை,

பிரபல யூ டியூபர் டிடிஎப் வாசன் கோவைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே பைக் வீலிங் செய்து விபத்தில் சிக்கினார். இதில், டிடிஎப் வாசனுக்கு கை முறிவு ஏற்பட்டது. பைக் வீலிங் செய்து, விபத்தில் சிக்கிய நிலையில் டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். தொடர்ந்து, யூ டியூபர் டிடிஎப் வாசனை அக்டோபர் 3ம் தேதி வரை சிறையில் வைக்க காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து புழல் சிறையில் டிடிஎப் வாசன் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் பரிசோதனைக்காக டிடிஎப் வாசன் அழைத்து வரப்பட்டார். நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளநிலையில் டிடிஎப் வாசனுக்கு மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது. கை மற்றும் கால்களில் காயங்கள் இருப்பதால் மருத்துவ பரிசோதனைக்கு அவர் அழைத்து வரப்பட்டார்.

சோதனையின் முடிவில் கைதிகளுக்கான பிரத்யோக வார்டில் டிடிஎப் வாசன் அனுமதிக்கப்படுவாரா என்பது தெரியவரும்.

இதனிடையே காலையில் கட்டுடன் வலம் வந்த டிடிஎப் வாசன் தற்போது கட்டில்லாமல் நடந்து செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை