தமிழக செய்திகள்

போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

மருத்துவமனை பெண் ஊழியர் கடத்தல் சம்பவத்தால் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

தினத்தந்தி

புதுச்சேரி

வில்லியனூர் கணுவாப்பேட்டை வன்னியர் தெருவை சேர்ந்த பாலபாஸ்கர் மனைவி ஆரோக்கிய மேரி (வயது 31). இவர் கனக செட்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

சம்பவத்தன்று பணிக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஆரோக்கியை மேரியை மருத்துவமனையில் பணிபுரியும் டிரைவர் ஒருவர் கடத்தி சென்றதாகவும், அவரை மீட்டு தர வலியுறுத்தியும் அவரது உறவினர்கள் வில்லியனூர் போலீஸ்நிலையம் முன் புதுச்சேரி-விழுப்புரம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை