தமிழக செய்திகள்

கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பயணம் முடிந்து சென்னை திரும்பிய தனக்கு லேசான இருமல் இருந்ததாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும், மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இன்னமும் நோய் பரவல் நீங்க வில்லை என்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தொற்று பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசன் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை