தமிழக செய்திகள்

ஓசூர் அருகேதமிழக- கர்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி

தினத்தந்தி

ஓசூர்:

கர்நாடக மாநிலத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முழு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு மென்பொருள் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்படுகின்றன. மேலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடர் விடுமுறை வருவதாலும் பெங்களூருவில் தங்கி பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் ஏராளமானோர் நேற்று மாலை முதல் தங்கள் சொந்த ஊர்களுக்கு பஸ்கள், வேன்கள், கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றனர்.

இதன் காரணமாக ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓசூர் அருகே தமிழக கர்நாடக எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தூரத்திற்கு ஸ்தம்பித்து நின்றன. மேலும் வாகன ஓட்டிகள், பொதுமக்களும் அவதியடைந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து