தமிழக செய்திகள்

மதுவில் விஷம் கலந்து குடித்த ஓட்டல் காவலாளி சாவு

மதுவில் விஷம் கலந்து குடித்த ஓட்டல் தொழிலாளி பலியானார்.

தினத்தந்தி

கொண்டலாம்பட்டி:

ஓமலூர் தாலுகா கோட்டைமேட்டு பட்டியை சேர்ந்தவர் ரவி (வயது 50). இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இவர் மனைவியை பிரிந்து பெரிய புத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டார். இந்த நிலையில் இவர் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் காவலாளியாக வேலை பார்த்தார். இதனிடையே கடந்த 2-ந் தேதி பெரிய புத்தூரில் உள்ள சுடுகாட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு கொண்டலாம்பட்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரவி, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்