தமிழக செய்திகள்

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை திருட்டு

காங்கயம்

காங்கயம் அருகே உள்ள வீரணம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (வயது 47). இவர் தனது குடும்பத்தினரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்பு நேற்று முன்தினம் இரவு கோவையில் இருந்து வீரணம்பாளையம் வந்தார்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டும், அதில் வைத்திருந்த 7 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து காங்கயம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். முத்துலட்சுமி வௌயூர் சென்றதை அறிந்த ஆசாமிகள் அவருடைய வீட்டிற்கு வந்து கதவை உடைத்து நகையை திருடி சென்று இருப்பது தெரியந்தது. இதுகுறித்து காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

----

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...