தமிழக செய்திகள்

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ஸ்கூட்டர் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

திருவள்ளூரில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, ஸ்கூட்டர் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் பூங்கா நகர் ஆவாரம்பூ தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மனைவி சங்கீதா (வயது 31). இவர் நேற்று முன்தினம் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றார். நேற்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார்.

அதில் பீரோ உடைக்கப்பட்டு அரை பவுன் தங்க நகையும், அரை கிலோ வெள்ளிப்பொருட்களும், ஒரு டி.வி.யும் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரும் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து