தமிழக செய்திகள்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் தொடர் மழைக்கு 2 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள மெணசியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருடைய மனைவி இந்திரா காந்தி (வயது 45). கூலித்தொழிலாளி. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தெடர் மழை பெய்து வருகிறது. அதன்படி தொடர் மழைக்கு இந்திரா காந்தியின் ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் நேற்று காலை இடிந்து விழுந்தது. அதன்பேரில் அவர் அந்த பகுதிக்கு சென்று சேத விவரங்களை பார்வையிட்டு கணக்கெடுத்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நாசர் மனைவி யாஸ்மின் (50). இவருடைய ஓட்டு வீட்டின் மேற்கூரை தொடர் மழைக்கு இடிந்து விழுந்தது. தகவலின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் அந்த பகுதிக்கு சென்று சேத விவரங்களை பார்வையிட்டார். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...