சென்னை
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 17.69 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த (2021) சட்டமன்ற தேர்தலைவிட 3.89 சதவீதம் அதிகம் ஆகும். சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.
வாக்குகள் விவரம்:-
விருகம்பாக்கம் - 18.85%
தியாகராயநகர் - 18.75%
வேளச்சேரி - 18.12%
கொளத்தூர் - 17.51%
அண்ணா நகர் - 17.06%
வில்லிவாக்கம் - 17.02%
பெரம்பூர் - 16.96%
ஆயிரம் விளக்கு - 16.66%
ஆர்.கே.நகர் -16.32%
சைதாப்பேட்டை -16.05%
எழும்பூர் -15.64%
சேப்பாக்கம் -15.70%
துறைமுகம் -15.01%
மயிலாப்பூர் -14.51%
ராயபுரம் -14.39%
திருவிக நகர் -14.38%