தமிழக செய்திகள்

திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஹெச்.ராஜா ஆஜர்

திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகியுள்ளார்.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு விநாயகா சதுத்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சாச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமாசித்துப் பேசியதாக ஹெச்.ராஜா மீது திருமயம் போலீஸா வழக்குப் பதிவு செய்தனா. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி அவா மன்னிப்பு கோரினா.

இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை காவல்துறையினர் கைது செய்யக்கூடாது என ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி ஹெச்.ராஜா மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்ததோடு, இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி ஹெச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதன்படி இன்று திருமயம் உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்காக பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேரில் ஆஜராகியுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்