ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே சின்ன குத்தி கிராமத்தில், சாராயம் விற்பதாக ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் தலைமையில் போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அதே ஊரை சேர்ந்த கமலப்பா மற்றும் அவரது மனைவி ரத்தினம்மா ஆகிய இருவரும் சாராயம் காய்ச்சி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்து 105 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கணவன்-மனைவி 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.