தமிழக செய்திகள்

பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் கைது

பெண்ணுக்கு ஜீவனாம்சம் தர மறுத்த கணவர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

வாடிப்பட்டி

கருத்து வேறுபாடு

சோழவந்தான் திருவேடகத்தை சேர்ந்தவர் காயத்திரி (38). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வீரசின்னம்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன்(40) என்பவருக்கும் 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீதிமன்றம் மூலம் விவாகரத்து செய்யப்பட்டது. மேலும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஜீவனாம்சம் கோரி காய்த்திரி மனுதாக்கல் செய்தார்.

கைது

இந்த வழக்கில், மாதந்தோறும் காய்த்திரிக்கும், பெண் குழந்தைகளுக்கும் ரூ.20 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் ராஜேந்திரன் ஜீவனாம்சம் கொடுக்காமல் இருந்து வந்தார். இதையடுத்து வாடிப்பட்டி கோர்ட்டு ராஜேந்திரனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது.

அந்த உத்தரவுப்படி சாணார்பட்டி போலீசார் ராஜேந்திரனை கைதுசெய்து நேற்று வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி வெங்கடலெட்சுமி, ராஜேந்திரனை 15 நாள்காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்