தமிழக செய்திகள்

சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில் கணவன் கைது

சென்னையில் மனைவி தற்கொலை வழக்கில், கணவன் மீது வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

சென்னை அம்பத்தூர் அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அசாருதீன் (வயது 31). இவரும் ஹுருல் சமீரா(29) என்ற பெண்ணும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். டாக்டர்களான இவர்கள் இருவரும் அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தனர். கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி ஹுருல் சமீரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் விசாரித்தனர். ஆர்.டி.ஓ. விசாரணை அறிக்கையில், அசாருதீன் வரதட்சணை கேட்டு சண்டையிட்டதாலும், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டதாலும் ஹுருல் சமீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், வரதட்சணை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து டாக்டர் அசாருதீனை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்