சென்னை,
மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக நியமித்த பிறகு இல கணேசன் கூறியதாவது: உணர்வுபூர்வமாக ஒரே வீடு போலத்தான் உணர்கிறேன். மணிப்பூரில் என்னை ஆளுநராக நியமித்து இருப்பதன் மூலம் அனுபவ ரீதியாக இது ஒரே நாடு என்று உணர்வதற்கான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
இதற்கு முன்பாக கூட மத்திய பிரதேச மக்களுக்கு பணி செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது மணிப்பூர் மாநில மக்களுக்காக பணி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆளுநராக நியமிக்கப்பட்டு இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.