தமிழக செய்திகள்

மதுரை வந்த பிரதமர் மோடியை வரவேற்றதில் மகிழ்கிறேன் - எல்.முருகன்

பிரதமர் மோடி மதுரைக்கு வருகை தந்துள்ளார்.

மதுரை,

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மதுரையில் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காகவும், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காகவும் பிரதமர் மோடி இன்று மதுரை வந்தடைந்தார். அவரை மத்திய இணை மந்திரி எல்.முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். இது தொடர்பாக எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

”சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிற்கு வருகை பிரிந்துள்ள மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நமது தமிழக மக்கள் சார்பாக, தமிழ் எழுத்துக்களும் திருக்குறளும் அச்சடிக்கப்பட்ட சால்வை அணிவித்து வரவேற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.”

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.