சென்னை,
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று ஒருநாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசியதாவது:
*வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு எனக்கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி
*இனிய வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி
*சென்னை வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
*சென்னை அறிவும் ஆற்றலும் நிரம்பிய நகரம்
*தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும்
*வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
*நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தினார்.
*நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி தானிய உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளது.
*கல்லணை கால்வாயை புனரமைக்கும் திட்டம் மிகப்பெரும் தாக்கத்தை ஏர்படுத்தும்
*வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்' - ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு
* சென்னை மெட்ரோ விரிவாக்கம் அடைந்து வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
*சிறந்த போக்குவரத்து சேவைகள் வணிகத்தை பெருக்க உதவும்.
*மின் மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
*ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் என்ற மகாகவி பாரதியின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பிரதமர் உரை
*பாதுகாப்பு துறைக்கு நவீன உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது
*அர்ஜூன் மார்க் -1ஏ கவச வாகனத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருள் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது.