தமிழக செய்திகள்

‘நான் பிரச்சினைகளை தீர்ப்பவன்தான்’ - மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

‘நான் பிரச்சினைகளை தீர்ப்பவன்தான்’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:-

மு.க.ஸ்டாலின் கிராமசபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்-அமைச்சர். ஆம் நான் பிரச்சினைகளை தீர்ப்பவன்தான். இதோ ஓர் ஆதாரம்.

கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் எம்.எல்.ஏ.வால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.

யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை