தமிழக செய்திகள்

எனக்கு அரசியல் வேண்டாம் ; குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் ஆசை - தீபா

எனக்கு அரசியல் வேண்டாம். குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் ஆசை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறி உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா திடீரென அரசியலில் குதித்தார். எம்.ஜி.ஆர். - அம்மா - தீபா பேரவை என்ற இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதனை அதிமுகவுடன் இணைப்பதாக கூறினார். இந்த நிலையில் "முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன், யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்" என தீபா கூறி உள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேஸ்புக்கில் கூறி இருப்பதாவது:-

ஏன் காலையிலேயே தொந்தரவு செய்கிறீர்கள். பேரவையை அதிமுக உடன் இணைத்து விட்டேன், விருப்பம் இருந்தால் அந்த கட்சியில் சேர்ந்து கொள்ளுங்கள். தீபா பேரவை பெயரைச் சொல்லி தொடர்ந்து என்னை துன்புறுத்தி வருவதை இதோடு நிறுத்த வேண்டுகிறேன்.குழந்தை பெற்றுக் கொண்டு கணவரோடு வாழத்தான் எனக்கு ஆசை.

முழுமையாக பொதுவாழ்க்கையில் இருந்து விலகுகிறேன். யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம், எனக்கு அரசியல் வேண்டாம். என்னை தொலைபேசியில் அழைக்க வேண்டாம். மீறி அழைத்தால் போலீசில் புகார் செய்வேன். எனக்கென்று குடும்பம் உள்ளது, அதுதான் எனக்கு முக்கியம் என தீபா கூறி உள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்