தமிழக செய்திகள்

சந்திரயான் - 2வுக்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின் டுவிட்

சந்திரயான் - 2வுக்காக பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், நாளை அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக, ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 20 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை தெடங்கி உள்ளது. விண்ணில் ஏவிய 16 நிமிடங்களில் புவி சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்படும்.

பின்னர், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு விண்கலம் மாறும். அந்த பாதையில் 45 நாட்கள் பயணித்து, செப்டம்பர் 6-ந் தேதி நிலவை சென்றடையும்.

இந்நிலையில் சந்திரயான் - 2வுக்காக பணியாற்றிய அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

#ISRO மற்றும் # சந்திரயான் 2 உடன் பணியாற்றிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது நாட்டின் எதிர்காலம் அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை சார்ந்தே இருக்கும். மேலும் திமுகவின் சார்பிலும் எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்