சென்னை,
திமுக.வின் கே.என்.நேரு பேச்சுக்கு பதில் தெரிவிக்கும் விதமாக, நாங்கள் யாரையும் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்கச் சொல்லவில்லை என்றார் கராத்தே தியாகராஜன். இதையடுத்து காங்கிரஸில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கிடையே இன்று காலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து பேசினார்.
இந்நிலையில் கே.எஸ். அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தி உள்ளேன் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரம் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
கராத்தே தியாகராஜன் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. கராத்தே தியாகராஜனின் பேச்சு திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நல்லுறவுக்கு பாதகமானவை. கராத்தே தியாகராஜனின் பேச்சு ஏற்புடையதல்ல என்பது என்னுடைய கருத்து. கே.எஸ். அழகிரியை சந்தித்து வருத்தம் தெரிவிக்க கராத்தே தியாகராஜனிடம் அறிவுறுத்தி உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.