தமிழக செய்திகள்

முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை : ஓ. பன்னீர்செல்வம் பேட்டி

தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் எனக்கு உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணைக்காக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்றும் இன்றும் ஆஜர் ஆனார். இரு நாட்களிலும் சுமார் 9 மணி நேரம் ஓ. பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பான பல்வேறு வாக்குமூலங்களை அளித்தார். விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது: - ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன்.

ஆறுமுகசாமி ஆணையம் 7 முறை எனக்கு சம்மன் அனுப்பியது. முரண்பட்ட பதில் எதையும் நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவிக்கவில்லை. எனக்கு தனிப்பட்ட முறையில் சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உண்டுஎன்றார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து