தமிழக செய்திகள்

அண்ணன் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் - கவர்னர் தமிழிசை செளந்தரராஜன்

தமிழக முதல்-அமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன் என கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தி கொண்டு இருப்பதாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தெலங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் பூரண உடல் நலத்துடன் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்