சென்னை,
இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல்வேறு அரசியல் தலைவர்கள் தீரன் சின்னமலையின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"ஒப்பற்ற தாய்த்திருநாட்டின் விடுதலை ஒன்றையே தன் லட்சியமாக கொண்டு, போர் புரிந்து வெற்றிகள் பலகண்டு, ஆங்கிலேய அரசுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்து, இம்மண்ணின் விடுதலைக்காக தன் இன்னுயிரை நீத்த வீரத்தின் விளைநிலம், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவுநாளில் அவர்தம் வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.