தமிழக செய்திகள்

இந்தி திணிப்பு: திமுக போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் காங்கிரசாருக்கு சிதம்பரம் வேண்டுகோள்

இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும் என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

சென்னை

முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்துப் போராடும் காலம் வந்திருக்கிறது என முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு ஒரு சவால் விடப்பட்டிருக்கிறது. இந்தி மொழி மட்டுமே இந்திய மக்களை ஒன்றுபடுத்தும் என்ற நச்சுக் கருத்தை எதிர்த்து போராடும் காலம் வந்திருக்கிறது.

தமிழ் இனம் வேறு, தமிழ்மொழி வேறு அல்ல. தமிழ் இனத்தின் அடையாளமே தமிழ்மொழி தான். எந்த மொழியும் தமிழ் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு ஒருநாளும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்று உரத்த குரலில் சொல்வோம்.

இந்தி மொழி பேசாத அல்லது இந்தி மொழியைத் தாய்மொழியாக ஏற்றுக்கொள்ளாத அனைத்துப் பிறமொழி மக்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக வேண்டும்.

20.09.2019 அன்று திமுக அறிவித்த இந்தித் திணிப்பு போராட்டத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் கே.எஸ்.அழகிரியும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை