சென்னை,
தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறேன்.
அதே சமயம் திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர, தினக்கூலி, தொகுப்பூதிய மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கும் இந்த அகவிலைப்படி உயர்வு தரப்படவேண்டும்.
அவர்களை நிரந்த பணியாளர்களாக நியமிக்க வேண்டும். ஆகவே அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை பரிசீலிக்கும்படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.