சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
1 லட்சத்து 37 ஆயிரம் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகள் கடந்தபேதும் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அந்த மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில் ஐ.நா. மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்காக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உட்பட யார் குரல் கொடுத்தாலும் அதை மனதார வரவேற்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.