தமிழக செய்திகள்

3-ந் தேதி கூட்டணியை அறிவிப்பேன் - பிரேமலதா விஜயகாந்த் தகவல்

தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வுக்கு மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவருடைய மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தே.மு.தி.க. தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுடனும், மத்திய அரசுடனும் நல்ல நட்பு உறவை கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் தே.மு.தி.க.வுக்கு மக்களிடையே நல்ல ஆதரவு உள்ளது. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த தேர்தல் வாக்குறுதியாக அறிவித்ததில், 50 சதவீத திட்டங்களை மட்டுமே தி.மு.க. அரசு நிறைவேற்றி உள்ளது. சென்னையில் வருகிற 3-ந் தேதி கூட்டணி குறித்து அறிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.