சென்னை,
சசிகலா தினந்தோறும் தொண்டர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அவர் உரையாடும் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சிவகங்கையை சேர்ந்த சரவணன் என்ற தொண்டருடன் சசிகலா பேசியதாவது:-
பின்வாங்க மாட்டேன்
தொண்டர்:- இனியும் உங்க முடிவில் இருந்து பின்வாங்கிடாதீங்கம்மா...
சசிகலா:- இனி நிச்சயம் என் முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன். தொண்டர்கள் ரொம்ப கவலையா இருக்காங்க. எனவே நிச்சயம் வந்துடுவேன். இவங்க யாருமே கட்சி நலனை பார்க்கல. தனி நபர்களுக்காக கட்சி நடக்கிற மாதிரி இருக்கேனு நானும் நினைச்சேன். தொண்டர்களும் அதையே சொல்றாங்க. அதனால் எந்த எதிர்ப்பு வந்தாலும் இனிமேல் பின்வாங்க போறதில்லை. அம்மா ஆட்சி வரட்டும்னு தான் நான் ஒதுங்கி இருந்தேன். ஆனால் அதை இவங்க செய்யமுடியல. கட்சிக்காரங்களையும் நிம்மதியா இருக்கவிடல..
அதேபோல சேலத்தை சேர்ந்த ராஜ்குமார், செங்கல்பட்டை சேர்ந்த சிரஞ்சீவி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த இளவரசன், வாசுதேவநல்லூரை சேர்ந்த மாரியப்பன் ஆகியோரிடமும் சசிகலா பேசினார்.