தமிழக செய்திகள்

"தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க எந்நாளும் உழைப்பேன்": முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கருணாநிதி வழியில் தமிழக உரிமைகளைக் காக்க எந்நாளும் உழைப்பேன் என்று முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தினத்தந்தி

திமுக தலைவராக தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பொதுக்குழு கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

திமுக தலைவராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், மு.க ஸ்டாலின் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இனமானமும் சுயமரியாதையும் காக்கும் அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்புக்கு இரண்டாம் முறையாக என்னைத் தேர்ந்தெடுத்த உடன்பிறப்புகள் அனைவர்க்கும் நன்றி! தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் தமிழக உரிமைகளைக் காக்க எந்நாளும் உழைப்பேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்