திருவாரூர்,
திருவாரூரில் ரூ.22.06 கோடியில் 23 புதிய திட்டங்களுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.781 பயனாளிகளுக்கு ரூ.5.52 கோடி மதிப்பில் நல உதவி வழங்கபட்டது.
பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, கூட்டணிக்கு பா.ஜ.க. தலைமையா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விளக்கம் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, யார் யாருடன் கூட்டணி என்பது முடிவாகாத நிலையில் இதுகுறித்து தற்போது பேச முடியாது. தேர்தல் வரும் போது தான் கூட்டணிக்கு யார் தலைமை என்பது முடிவு செய்யப்படும் என்று கூறினார்.
நீட் தெடர்பான எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். கெரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.