தமிழக செய்திகள்

நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன

நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டன.

தினத்தந்தி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் அருகே திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் 19-ந் தேதியன்று இரவில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நிற்காமல் சென்ற ஒரு கார, போலீசார் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். அந்த காரில் சோதனையிட்டபோது காரில் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன், 2 நாட்டு வெடிகுண்டுகளும் இருந்தது தெரியவந்தது. அவற்றை நவல்பட்டு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த காரில் இருந்தவர்களை, போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் நவல்பட்டு போலீசார் கைப்பற்றிய அந்த நாட்டு வெடிகுண்டுகளை, நீதிமன்ற உத்தரவின்படி செயலிழக்க செய்வதற்கான பணி நேற்று நடந்தது. இதில் அந்த நாட்டு வெடிகுண்டுகளை திருவெறும்பூர் அருகே கும்பக்குடி பகுதிக்கு நவல்பட்டு போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் காண்டு சென்றனர். அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்