தமிழக செய்திகள்

பணிகள் நிறைவு பெறாமல் பணம் பெற்றால், கட்சிப் பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு

பணிகள் நிறைவு பெறாமல் பணம் பெற்றால், கட்சிப் பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

திருச்சி,

திருச்சியில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்தபின் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திருச்சி ஒரு சிறப்பான மாவட்டமாக உருவாகும். பழைய சாலைகளை அப்புறப்படுத்தி தான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகிறது. மில்லிங் செய்யாமல் ரோடு போடப்படுகிறது என்று எனக்கே புகார் வந்தது. ஆனால், கண்டிப்பாக மில்லிங் செய்து தான் சாலைகள் தற்போது அமைக்கப்படுகிறது.

டெண்டர் பணிகள் முடிக்காமலே சில இடங்களில் மிரட்டி பணம் வாங்குவதாக தகவல்கள் வருகிறது. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து வருகிறோம், டெண்டர் பணிகள் நிறைவு பெறாமல் பணம் பெற்றால், கட்சிப் பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

அதனை தொடர்ந்து ஈ.சி.ஆர் சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் சாலை எனப் பெயர் மாற்றம் செய்தது குழப்பத்தை ஏற்படுத்தும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தது குறித்து கேள்விக்கு அமைச்சர் பதில் அளிக்கையில்,

நான் அவரைப் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. மக்கள் யாரும் குழம்ப மாட்டார்கள். சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலை மட்டும்தான் கலைஞரின் திருப்பெயரில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அந்தச் சாலைக்கு கிழக்கு கடற்கரைச்சாலை என்று பெயர் வைத்ததே கலைஞர்தான்.

அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில்தான் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரையிலான சாலைக்கு அவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் இது குழப்பமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து