சென்னை
சென்னை காவல் இணை ஆணையர் சுதாகர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;-
ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. பேருந்து கூரை மீது மாணவர்கள் ஏறினால் பேருந்தை ஓட்டுநர்கள் இயக்க வேண்டாம். மோதல்கள் ஏற்படும் வழித்தடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்படுத்தப்படும்.
இதுவரை அவர்களை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம், இது தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் அடைக்கப்பட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். மாணவர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் பட்சத்தில் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.