தமிழக செய்திகள்

என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்

பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்று ப.சிதம்பரம் விமர்சித்தார்.

தினத்தந்தி

சென்னை,

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று தமிழகம் திரும்பினார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம் கூறியதாவது:-

"நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள்; என் மன உறுதியை குலைக்க முடியாது.

இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவே முடியாது. பாஜகவை எதிர்ப்பதில் தென் மாநில மக்கள் விழிப்புடன் இருப்பது போல் நாடு முழுவதும் இருக்க வேண்டும்" என்று கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்