தமிழக செய்திகள்

கிராமங்கள் முன்னேறினால் நாடு வளர்ச்சி அடையும்

கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு வளர்ச்சி அடையும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

தினத்தந்தி

திட்டச்சேரி:

கிராமங்கள் முன்னேறினால் தான் நாடு வளர்ச்சி அடையும் என கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

கிராம சபை கூட்டம்

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு திருமருகல் ஒன்றியம் நரிமணம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையாளராக கலந்து கொண்டு ஊராட்சியின் முன்னேற்றத்திற்கு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் கூறியதாவது:-

மகாத்மா காந்தியடிகள் ஒரு நாட்டின் வளர்ச்சியை கிராமப் புறங்களின் வளர்ச்சியைக் கொண்டே கணிக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடு வளர்ச்சி அடையும். இதன் அடிப்படையில் தான் கிராம சபை கூட்டங்கள் மூலம் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் மக்களின் கருத்துகளை அறிந்து திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுகிறது.

மழைநீர் சேகரிப்பு அமைப்பு

பொதுமக்கள் குடிநீரை சுத்தமான பாத்திரங்களில் மூடி வைத்து உபயோகிக்க வேண்டும்.அனைத்து ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.வடக்கிழக்கு பருவமழைக்காலத்தில் ஒவ்வொரு துளி நீரையும் சேமித்திடும் வகையில் வீடுகள், வணிக நிறுவனங்கள். பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், பொதுக்கட்டிடங்கள் என அனைத்து கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் சவுந்தரராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்திமா ஆரோக்கியமேரி, பாலமுருகன், நரிமணம் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக், அரசு அலுவலர்கள், ஊராட்சி பேரிடர் மேலாண்மை குழு உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்துககொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது