தமிழக செய்திகள்

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போடுபவர்கள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது-

அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாகும் இந்த இயக்கத்தை தோற்றுவித்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர். அவர் ஒரு தெய்வ பிறவி. அவருடைய சிலையில் காவித்துண்டை போடுபவர்கள் மனித பிறவி அல்ல ,ஒரு இழிவான பிறவி.

எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு தெய்வமாக வாழ்ந்தவர் அவரை கொச்சைப்படுத்துவது இழிவான பிறவிகளுக்கு உரிய குணமாகும். காவிதுண்டை எங்கு போட வேண்டுமோ அங்கு போட வேண்டும். குங்குமத்தை நெற்றியில் தான் வைக்க வேண்டும். அதை தரையில் போட்டு மிதிக்க கூடாது.

அது போல நாடு போற்றும் மக்கள் தலைவரை காவி துண்டு போட்டு கொச்சைப்படுத்துபவர்கள் இழிவான பிறவிகள். தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் இப்படி செயல்படுபவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இப்படிப்பட்ட ஈன பிறவிகள் எங்களிடம் சிக்கினால் காலில் போட்டு மிதிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்