தமிழக செய்திகள்

தி.மு.க.விடம் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வோம்: திருமாவளவன்

தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.குழுவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும்  போட்டியிடுவோம். தெலுங்கானாவில் 10 இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். ஆந்திராவில் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை நிறுத்த உள்ளோம். ஆந்திராவில் கூட்டணியில் இணைவதற்கான சூழல் அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவோம்.

கர்நாடகாவில் 6 இடங்களிலும், கேரளாவில் 3 இடங்களிலும் போட்டியிட உள்ளோம். தமிழகத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் தேவைப்பட்டால் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திப்போம். தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க.குழுவிடம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தி.மு.கவிடம் இருந்து அழைப்பு வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு செல்வோம்" இவ்வாறு அவர் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு