தமிழக செய்திகள்

உல்லாசத்துக்கு வரவில்லை என்றால்... வீடியோவை காட்டி பெண்ணை மிரட்டிய காவலாளி

காவலாளி ரங்கசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தினத்தந்தி

கோவை,

கோவை வேலாண்டிபாளையம் காந்தி காலனி மேற்கு வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது49). இவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு அங்கு வேலை பார்த்த 47 வயது பெண்ணுடன் காவலாளிக்கு பழக்கம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் ரங்கசாமி, அந்த பெண்ணுடன் தனிமையில் நெருக்கமாக இருந்து உள்ளார். அதை அவர் ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் அந்த ஆபாச வீடியோவை காட்டி தனது ஆசைக்கு இணங்காவிட்டால் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இது குறித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்து வெளியே வந்த ரங்கசாமி மீண்டும் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு உல்லாசத்திற்கு அழைத்து கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதையடுத்து அந்த பெண் மீண்டும் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரங்கசாமியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சண்டிகாரில் காலிஸ்தானிய பயங்கரவாதிகள் பெயரில் 26 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஈரானை தாக்கும் அளவுக்கு அமெரிக்காவிடம் வலிமை இல்லை; அதனாலேயே... மத்திய கிழக்கு நிபுணர் பேட்டி

மராட்டியம் அர்ப்பணிப்புள்ள ஒரு தலைவரை இழந்து விட்டது: அஜித் பவார் மறைவுக்கு தெண்டுல்கர் இரங்கல்