தமிழக செய்திகள்

கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தெடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கொரோனாவிற்கு புதிதாக மருந்து கண்டு பிடித்தால் சுகாதாரத்துறையை அணுகலாம். பரிசோதனை மூலமாக நிரூபித்தால் தக்க அங்கீகாரம் அளிக்கப்படும் .

தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனையோடு இணைந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம். தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் குறித்து அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி