கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

த.வெ.க. சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - விஜய் பங்கேற்கிறார்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 7-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தினத்தந்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வருகிற 7-ம் தேதி இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்றும், இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்க உள்ளதாகவும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

ஈகைப் பண்பையும் நல்லிணக்கத்தையும் போற்றும் புனித ரமலான் நோன்பு இஸ்லாமியப் பெருமக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, வரும் 7-ம் தேதி (07.03.2025) மாலை, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற உள்ளது. இதில் கழகத் தலைவர் விஜய், இஸ்லாமியப் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

இடம்: ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், ராயப்பேட்டை சென்னை

தேதி: 07.03.2025 வெள்ளிக்கிழமை

நோன்பு திறக்கும் நேரம்: மாலை, சரியாக 06.24 மணி

மக்ரிப் பாங்கு: மாலை, 06.28 மணி

மக்ரிப் தொழுகை: மாலை, 6.35 மணி (ஒய்.எம்.சி.ஏ. அரங்கிற்குள்)

மக்ரிப் தொழுகை முடிந்ததும் கழகத்தின் சார்பில் இப்தார் விருந்து நடைபெறும், என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்