தமிழக செய்திகள்

விஷ சாராய விவகாரம்; கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து 57 பேர் பலியான நிலையில், பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இதனிடையே கல்வராயன் மலைப்பகுதியில், காவல் ஆய்வாளர்கள் தலைமையில் பேலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கல்வராயன் மலையடிவாரப் பகுதிகளான பொட்டியம், மாயம்பாடி, மளிகைப்பாடி, கல்படை, மட்டபாறை, பரங்கிநத்தம் உள்ளிட்ட பகுதிகளிலும் தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் கச்சிராயபாளையம், பரிக மண்மலை, செல்லம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனை நடைபெறுகிறதா என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாராய வியாபாரிகளை தேடும் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்