தமிழக செய்திகள்

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை; அன்புமணி ராமதாஸ் அறிக்கை

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா வைரசானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்து தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய, தமிழக அரசுகள், ஒமிக்ரான் கொரோனா தொற்றின் ஆபத்தை உணர்ந்து, அதை தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒமிக்ரான் தொற்று பரவியுள்ள நாடுகளுடனான, விமான போக்குவரத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளில், தினமும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அங்கிருந்து வரும் விமான பயணியரிடம், கொரோனா ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் தனிமைப்படுத்தும் முறையை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்